An elderly woman commit sucide by set Fire in body near in Perambalur
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், உடும்பியம் காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 70). இவர் கடந்த ஓரிரு மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று 16 ந் தேதி வீட்டில் ஆள் யாரும் இல்லாதபோது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து முத்தம்மாள் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு இன்று 17 ந் தேதி சிகிச்சை பலனின்றி முத்தம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.