An examination of the preparation for Group-4 in Perambalur was held by the Collector.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறவுள்ள தொகுதி 4 தேர்வு 11.02.2018 அன்று முற்பகல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் தேர்வு பணிகளுக்கு பணியமர்த்தப்படும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கும் விதமாகவும் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியரின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 61 மையத்தில் 18,561 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்விற்கு 61 முதன்மை கண்காணிப்பாளர் மற்றும், 15 நடமாடும் குழு உள்ளிட்டோருக்கு தேர்வு குறித்து பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டள்ளது.

தேர்வு நடைபெறும் மையங்களுக்கு குடிநீர் வசதி, சிறப்பு பேருந்து வசதிகள் மற்றும் தேர்வு நடைபெறும் மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 61 முதன்மை கண்காணிப்பாளர்களும் தேர்வு கூடங்களில் அரசு விதிமுறைகளளைப் பின்பற்றி எந்தவிதமான அசம்பாவிதங்களும் நிகழாவண்ணம் தேர்வினை சிறப்பாக நடத்தி தரவேண்டும். இத்தேர்வினை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 7 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது, என ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சேதுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!