An old woman arrested for sexually harassing girl near Perambalur
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஒதியம் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை-சுமதி தம்பதியினரின் மகள் ஊர்மிளா (வயது 9) பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இவர் ஒதியம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த நல்லதம்பி மகன் பாலசுப்பிரமணியன்( வயது 53), என்பவர் கடந்த 14ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அவரது வீட்டிற்கு எதிரே உள்ள தனது தோட்டத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதில் உடலின் மர்ம பகுதியில் வீக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட சிறுமி சர்மிளா வலி தாங்க முடியாமல் நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சர்மிளாவின் பெற்றோர் குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குன்னம் போலீசார் முதியவர் பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.
மேலும் சிறுமி சர்மிளா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சம்பவம் உறுதி செய்யப்பட்டு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த. முதியவர் பாலசுப்பிரமணியனை அடையாளம் காட்ட சொல்லி குன்னம் போலீசார் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
9 வயது பள்ளி சிறுமி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.