Anna is a great birthday party meant to participate : Namakkal DMK
நாமக்கல்லில் இன்று நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழாவில்திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என மாவட்ட பொறுப்பாளர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
அண்ணாவின் 110-வது ஆண்டு பிறந்தநாள் விழாவை இன்று (15ம் தேதி)சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனைமுன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கும், உருவப்படத்திற்கும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகளில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும் உள்ள நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி,நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பாக நடத்திட வேண்டும்.
நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள அண்ணா திருவுருவசிலைக்கு காலை 8 மணியளவில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான காந்திசெல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகராட்சி, ஒன்றியநிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
அதேபோலஇன்றுமாலை 4மணிக்கு விழுப்புரம், நகராட்சி மைதானம், அண்ணா திடலில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கட்சி தலைவர் ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். இவ்விழாவில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, வார்டு நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.