Announcement of student admissions at Perambalur Government Music School

பெரம்பலூர் : தமிழ்நாடு அரசு, கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி 1998 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் 2017-2018 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை ஜுன் 07-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், மிருதங்கம் மற்றும் வயலின் ஆகிய பிhpவுகளில் 3 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் 12 வயது முதல் 25 வயது வரை உள்ள மாணவர்கள், மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

நாதசுரம், தவில் மற்றும் தேவாரப் பிரிவுகளில் தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இதர பாடப்பிரிவுகளில் சேருவதற்கு 7-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்கவேண்டும்.

இசைப் பள்ளியில் சேரும் மாணவ மாணவியர்களுக்கு தனித் தனியே அரசு விடுதி வசதி உண்டு. மாணாக்கர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.400- வழங்கப்படுகிறது. சீருடை, காலனிகள் மற்றும் சைக்கிள் மாணாக்கர்களுக்கு அரசு இலவசமாக வழங்குகிறது. அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணச் சலுகை பெறலாம்.

பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.152- மற்றும் பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை ஆகும். இப்பள்ளியில் சேர விரும்பும் மாணாக்கர்கள் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, 12-வது வார்டு, எண்.5. இராதாகிருஷ்ணன் தெரு, கே.சி. காம்பளக்ஸ், விளாமுத்தூர் ரோடு, பெரம்பலூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9486152007 என்ற கைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் என அறிவிப்பு செய்யப்பட்டள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!