Announcement of unemployed scholars to attach the aadhar to their bank account
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் விடுத்துள்ள தகவல்
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இரணடாயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (மாற்றுத் திறனாளிகள் உட்பட) பள்ளியிறுதி வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் தோறும் ரூ. 200-ம், பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், பிளஸ்2-டிப்ளமோதேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400-ம் மற்றும் பட்டதாரிகளுக்கு மாதம் தோறும் ரூ.600-ம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித்தொகையானது ஒவ்வொரு பயன்தாரருக்கும் 3-ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையானது 3-மாதங்களுக்கு ஒருமுறை 3-மாதத்திற்கான தொகையும் சேர்த்து பயன்தாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
தற்போது அரசின் உதவித்தொகையை பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற்று வரும் பயணாளிகள் அனைவரும் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை தொடர்பு கொண்டு தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும். மேலும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்த விபரத்தை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உடனடியாக தெரிவிக்கவேண்டும்.
எனவே மார்ச்-15-ஆம் தேதிக்குள் இப்பணியை முடித்தால் மட்டுமே அடுத்த காலாண்டிற்கு நடவடிக்கை மேற்கொள்ள இயலும். ஆகையால் உடனடியாக ஆதார் எண் விவரத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.