Applicants can apply for obtaining a motorized sewing machine

model
பெரம்பலூர் மாவட்ட சமூக நலத் துறையின் சார்பில், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளி ஏழைப் பெண்கள் மின் மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகள் தங்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
மேலும், விண்ணப்பத்துடன் வருமானச் சான்று ரூ.72000- க்குள் (வட்டாட்சியரிடம் பெற வேண்டும்), இருப்பிடச் சான்று (வட்டாட்சியரிடமிருந்து பெற வேண்டும் அல்லது குடும்ப அட்டை), 6-மாத கால தையல் பயிற்சி சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து பெற வேண்டும்),
வயது சான்று (20 முதல் 40 வயது வரை) அல்லது கல்விச் சான்று, அல்லது பிறப்புச்சான்று, சாதிச் சான்று, கடவுச்சீட்டு அளவு மனுதாரரின் வண்ணப்படம் – 2, விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளி பெண் சான்று நகல், ஆதார் அடையாள அட்டை, ஆகியவற்றுடன் விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும் ஜுலை15 -க்குள் சமர்ப்பிக்க வேண்டும், என அறிவிக்கப்பட்டுள்ளது.