மாவட்ட அளவிலான வங்கியாளர் கள் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த வங்கி கிளைகளின் செயல்பாடுகள் குறித்து இக் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மற்றும் அரசாங்க துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் தாட்கோ திட்டத்துறை, மகளிர் திட்டம், புதுவாழ்வு திட்டம், கறி கோழி வளர்ப்பு திட்டம், மாவட்ட தொழில் மையம், சார்ந்த கடன் உதவிகளை நிலைபாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
இக்கூட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், தங்களுடைய தொழிலை மீண்டும் தொடங்கும் வகையில், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள், ஏற்கனவே வழங்கிய கடன்களுக்கு கடன் தவணையை ஒத்தி வைத்தல், மறு கடன் உதவி போன்ற பல சலுகைகளை வழங்க தமிழக அரசு அறிவுறித்தியதை தொடர்ந்து, குறுந் தொழில்களுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தின் மூலம் இரண்டு நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் கடனுதவி கேட்டு விண்ணப்பம் அளித்தவர்களுக்கு, உடனடியாக கடனுதவிகளை வழங்க வங்கிகள் ஆவண செய்ய வேண்டும்.
மேலும் 29.01.16 அன்று நடைபெற உள்ள மூன்றாம் மற்றும் இறுதிகட்ட சிறப்பு முகாமில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கடனுதவி வழங்கும் முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இக்கூட்டதில் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சிவராமன், தஞ்சை மண்டல இந்தியன் ஓவர்சிஸ் வங்கிகளின் துணை பொது மேலாளர் சித்தார்தன்;, சென்னை ரிசாவ் வங்கி மேலாளர் தியாகராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பா. அருள்தாசன உள்ளிட்ட வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.