Apply for Chief Minister’s Girl Child Protection Scheme : Perambalur Collector Information!

Model

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 2022- 2023 – ஆம் நிதியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டுக்குள் இ-சேவை மையத்தில் இத்திட்டத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

புதிதாக விண்ணப்பிக்க இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்ய , குடும்ப அட்டை , ஆதார் அட்டை சாதிச் சான்று , வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, தந்தையின் கல்வி மாற்று சான்று , தாயாரின் கல்வி மாற்று சான்று, 40 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சை சான்று , ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றின் நகல்கள் மற்றும் குடும்பப் புகைப்படம் , குழந்தைகளின் பிறப்பு சான்றுகள் அசல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யவும்.

இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வைப்புத்தொகை ரசீது பெற்று 18 வயது முதிர்வடைந்த அனைத்து பயனாளிகளும் முதிர்வு தொகை அளிக்கப்பட்டு வருகிறது . எனவே 2001-2004 வரை பதிவு செய்து வைப்புத்தொகை பெற்றுள்ள அனைத்து பயனாளிகளும் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!