Apply for training in UPSC Preliminary Examination – 2018 – Perambalur Collector
2018-ஆம் ஆண்டில் மத்திய தேர்வாணைக் குழு நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு எழுதுவதற்கு அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து இணையத்தளம் online வழி அல்லது off line பயன்முறை வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள் ஆஃப்லைன் – ல் விண்ணப்பிக்க தேவையில்லை. இரண்டிலும் (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்) விண்ணப்பம் செய்தால் விண்ணப்பம் நிராகாpக்கப்படும்.
offline மூலமாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கல்வித்தகுதி, வயது, இருப்பிடம் மற்றும் சாதி சான்று ஆகியவற்றை சமர்ப்பித்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு www.civilservicecoaching.com என்ற இணையதள முகவரி மூலமாக அறிந்து கொள்ளலாம். இப்பயிற்சி மையத்தில் ஏற்கனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழு நேர பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
மேலும் 20.09.2017 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எனவே மாணவஃமாணவியர்கள் உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையலாம், என தெரிவித்துள்ளார்.