Apply to animal dry feed at subsidized prices
பெரம்பலூர் மாவட்ட நிர்வகாம் விடுத்துள்ள தகவல் :
தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், செட்டிக்குளம், வி.களத்தூர், வேப்பூர் ஆகிய கால்நடை மருந்தகங்களில் உலர் தீவன கிடங்குகளை நிறுவியுள்ளது,
வறட்சி நிலை சீராகும் வரை ஒரு கால்நடைக்கு தினம் 3 கிலோ வீதம் அதிகபட்சம் 3 கால்நடைகளுக்கு ஒரு வாரத்திற்கு 105 கிலோ வரை விவசாயி ஒருவருக்கு உலர் தீவனம் மானிய விலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.2- வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, கால்நடை வளர்ப்போர் தங்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் உலர் தீவன கிடங்கு அமைந்துள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயன் பெறலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.