Appoint employees to raise awareness of dengue, the District Executive Committee meeting of the DMK resolution
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் டெங்கு விழிப்புணர்வு பணியாளர்கள் உடனடியாக நியமனம் செய்யவேண்டும் என திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், மத்திய முன்னாள் இணை அமைச்சருமான காந்திசெல்வன் பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தற்போது அதிகமாக பரவி வரும் (உயிரிழப்பு ஏற்படுத்தக் கூடிய) டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் எதனால் வருகிறது, அதை தடுக்கும் வழி என்ன, என்பது பற்றி பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற விழிப்புணர்வு பணியாளர்களை உடனடியாக மாவட்ட நிர்வாகமும், மாவட்ட சுகாதாரத்துறையும் நியமித்து உயிர் இழப்பை தடுத்திட வேண்டும்.
கழிவுநீர் செல்லும் இடங்களை முறையாக பராமரித்திட வேண்டும். நாமக்கல் மாவட்டம் முழுவதும் மாவட்ட மருத்துவரணி சார்பில் இலவச முகாம் நடத்தி, அதில் தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் நிலவேம்பு கசாயம் வழங்கி உயிரிழப்புகளை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ராணி, மாநில சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், மாவட்ட துணை செயலாளர்கள் இராமலிங்கம், விமலா சிவக்குமார், மாவட்ட பொருளாளர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பவுத்திரம் கண்ணன், இளஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர்கள் அழகரசு, சுப்பிரமணி, நகர செயலாளர் சங்கர், பொறுப்பாளர்மணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் ஜெகநாதன், இராமசுவாமி,பாலசுந்தரம்,அசோக்குமார்,கவுதம், துரை, பழனிவேல்,பாலு,முத்துசாமி, பேரூராட்சி செயலாளர்கள் முருகவேல்,கண்ணன், ஜெயகுமார்,நல்லதம்பி,அன்பழகன்,செல்வராசு, தனபால்,சுந்தராஜ், செல்லவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.