Apr 25 Full enclosure must co operate to win the protest: marxist communist Party

ஏப்.25 முழுஅடைப்பு போராட்டம் வெற்றி பெற பாடு வேண்டும் மார்க்சிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் அரியலூர் மாவட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர்: மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் அரியலூர் மாவட்டக் குழு கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஆர்.அழகர்சாமி தலைமை வகித்தார்.

மாவட்டசெயலாளர் ஆர்.மணிவேல் முன்னிலை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை சிறப்புரையாற்றினார். பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழகத்தில் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணம் கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. உரிய நிவாரணம் கேட்டு மேலும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஏப்ரல் 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறது.

பொதுமக்களும், விவசாயிகளும் தொழிலாளர்களும் மாணவர்களும் வியாபாரிகளும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அதரவளித்து வெற்றி பெற வைத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டக்குழு கூட்டம் கேட்டுக் கொள்கிறது என்றும், பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் ஆழ்குழாய் கிணறு முதல் ஏரி குளம் வரை வறட்சியின் காரணமாக வறண்டு விட்ட காரணத்தால் மக்கள் குடிதண்ணீருக்காக ஆங்காங்கே போராட்டம் நடத்தி அவதிப்படுகிறார்கள்.

எனவே மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிடட பல்வறு தீர்மானங்களை நிறைவேற்றறப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!