Arts and Science College for Women University of Bharathithasan veppur first convocation

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் கலை அறிவியல் கல்லூரியை வழங்கி புதிய கட்டடம் கட்ட 12.2.2014 அன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆணையிட்டார்.

அதனடிப்படைபயில் வேப்பூரில் ரூ.7 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கட்டடங்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா 12.06.2015 அன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இக்ல்லூரியானது 4,609 ச.மீட்டர் பரப்பளவில் மூன்று தளங்களைக் கொண்டுள்ளதாக கட்டப்பட்டது. இக்கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளான தமிழ், ஆங்கிலம், வணிகவியல் மற்றும் இளங்கலை அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதம், கணினி அறிவியல், உயர் தொழில்நுட்பவியல் ஆகிய பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்பட்டது.

பின்னர் இயற்பியல், வேதியில் மற்றும் இளங்கலை மேலாண்மை (பி.பி.ஏ) உள்ளிட்ட பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு தற்போது 9 பாடப்பிரிவுகளுடன் இக்கல்லூரி இயங்கி வருகின்றது.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய ஊராட்சியாக கருதப்படும் வேப்பூரில் இக்கல்லூரி அமைந்தது வேப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு உயர்கல்வி கற்க மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்தது. அத்தகைய சிறப்புவாய்ந்த கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழா இன்று வேப்பூரில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழச்சியில் 114 மாணவிகளுக்கு பட்டங்களை மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் வழங்கினார். குறிப்பாக பாரதிதாசன் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் தமிழ்துறை சார்ந்த ஆர்.கஸ்தூரி 9வது இடத்தையும், பி..சத்யா 12வது இடத்தையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்ற உறுப்பினர் முனைவர் எம்.கண்ணன், கல்லூரி முதல்வர் முனைவர் சுப்பிரமணி மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!