At the Perambalur sugar factory, the boiler should be started only after the completion of boilerwork: Farmers Association

பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவரும், செந்துறை திமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான மு. ஞானமூர்த்தி தமிழ்நாடு சர்க்கரை கழக ஆணையருக்கு எழுதியுள்ள கடிதம் :

2017-2018ம் ஆண்டுகான கரும்பு அவரைப் பருவம் வரும் டிச. 6ம் தேதி துவங்க உள்ளதாக தெரிகிறது. ஆலையில் இன்னும் முதன்மை கொதிகலன் (பாய்லர்) சரிசெய்யப்படவில்லை. அதர்க்கு தேவையான டியூப்கள் இன்னும் வரவில்லை. இந்த டியூப்களை செய்வதர்க்கு முதலில் ஒரு தகுதியில்லாத காண்ராக்டரிடம் ஆர்டர் கொடுத்து அவர் செய்யமுடியாமல் கிடப்பில் போடப்பட்டு பிறகு வேறு ஒரு காண்ராக்டரிடம் கொடுத்திருப்பதாக தெரிகிறது. இதற்கெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும்.

இந்த முதன்மை பாய்லர்தான் சென்ற ஆண்டு பழுது ஏற்ப்பட்டு வெடிக்கும் அளவிர்க்கு சென்றது. இதனால் பலநாள் வெட்டிய கரும்புகள் காய்ந்தன. இந்த ஆண்டும் அந்த நிலை தொடரக்கூடாது. இதற்கு மாறாக ஜெனரேட்டர் கொண்டுவந்து இயக்கப் போவதாக தெரிகிறது. இந்த ஜெனரேட்டர் 10நாள் ஓடினால் அதர்க்கான டீசல் மற்றும் வாடகை மட்டும் ரூ. 7,66,000 கூடுதல் செலவாகும்.

ஆலைக்கு ஏற்ப்பட்டிருக்கும் நிதிச்சுமையில் ஜெனரேட்டர் வாடகைக்கு எடுத்து ஓட்ட வேண்டிய அவசரமும் அவசியமும் இல்லை. இந்த ஆண்டு அறைக்க வேண்டிய கரும்பும் 1,60, 000 டன்தான் உள்ளது. இந்த கரும்பை 3, 4மாதங்களில் அறைத்து விடலாம். எனவே முதன்மை பாய்லர் வேலை முழுமையும் பூர்த்தி செய்து ஆலை அறவையை துவங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், என அதில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!