Authorities confiscated the party flag dropping weight in perambalur
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது விதிகளை மீறியதாக அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட கட்சியின் கொடிக் கம்பங்களை வர்ணம் பூசி, விற்ற சம்பவம் பெரம்பலூரில் அனைத்து கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் கோட்டாசியர் அலுவரகத்தில் மழைமானிக்கு அருகே 120க்கும் மேற்பட்ட கொடி கம்பங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. அரசியல் கட்சியினர் பறிமுதல் செய்யப்பட்ட கம்பங்களை திருப்பி அளிக்க கோரி இருந்தனர். ஆனால், அவ்வாறு அதிகாரிகள் திருப்பி அளிக்காமல் கட்சி கம்பங்களுக்கு புதிய வர்ண்ம் தீட்டி விலைக்கு விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அரசியல் கட்சியினர் அரசு அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர். விற்கப்பட்ட கம்பங்களின் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. கம்பங்களை அரசு அதிகாரிகள் விற்று காசு பார்த்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.