Awareness in the industry norm guidelines
பெரம்பலூர் : தமிழக அரசு இளைஞர்களின் மேம்பாட்டிற்காக ஜூலை முதல் வாரத்தை தொழில் நெறி வழிகாட்டுதல் வாரமாக கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து தொழில் நெறி வழிகாட்டுதல் விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. இவ்விழிப்புணர்வு பேரணியை துணை காவல் கண்காணிப்பாளர் மோகன்தம்பிராஜன், பெரம்பலூர; பாலக்கரையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில், இளைஞர்கள் தொழில் நெறி வழிகாட்டுதல் பதாகைகள் ஏந்தியவாறும், கோஷங்களை எழிப்பியவாறும் பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் நகரை வலம் வந்தனர்.
பேரணி பாலைக்கரையிலிருந்து மத்திய பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட நூலகம் வழியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை சென்று அடைந்தது. இப்பேரணியில் சுமார் 150 மாணவ, மாணவியர்கள் மற்றும் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் இளைஞர்களும் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில் நெறி வழிகாட்டுதல் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இக்கருத்தரங்கில் தொழில் நெறி வழிகாட்டுதல், நெறியாளர் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது, வேலைவாய்ப்பு பெறுதல், நேர்முக பேட்டியை எதிர்கொள்வது தொழில் தொடங்குவதற்கான வழிவகைகள் ஆகிய தலைப்புகளில் கருத்துரை வழங்கினர்
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தியாகராஜன், இளைநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மணிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.