Awareness nurses march to emphasize cleanliness in Namakkal
நாமக்கல்லில் தூய்மை சேவையை வலியுறுத்தி விழிப்புணர்வு செவிலியர்கள் பேரணி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி சார்பில் தூய்மை சேவையை வலியுறுத்தி நாமக்கல்லில் பேரணி நடைபெற்றது. பேரணியை ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் செல்வக்குமார் தலைமை வகித்து துவக்கிவைத்து பேசியதாவது:
சுகாதாரம் என்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில் தூய்மை பாரத இயக்கத்தினை அனைத்து மக்களும் பங்கேற்கும் இயக்கமாக மாற்றுவதே தூய்மையே சேவை இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
பொது இடங்களை மக்கள் தாங்களாகவே முன் வந்து சுத்தம் செய்வதையும், சுத்தமாக வைத்திருப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் இந்த இயக்கம் நடத்தப்பட்டிருக்கிறது. நாமிருக்கும் இடங்களைத் தூய்மையாக வைத்திருப்பது காந்திஜியின் கனவுத் திட்டமாகும்.
நாம் பணி புரியும் இடங்கள் திருக்கோயில்கள் போன்றவை, அந்த இடங்களைத் தூய்மையாக, பூஜிக்கத் தகுந்ததாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருடைய கடமையாகும் என பேசினார்.
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் துவங்கிய பேரணி மோகனூர் ரோடு, அண்ணா சிலை, மணிக்கூண்டு, திருச்சி ரோடு வழியாக பின்னர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தது. இந்த பேரணியில் அரசு ஆஸ்பத்திரி ஆர்எம்ஓ கண்ணப்பன் மற்றும் பயிற்சி செவிலியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.