Bank employee carrying Rs 25 lakh robbery at the bank to change ..? Police are investigating.!

inr சென்னையில் விஐபிக்கு சொந்தமான பணத்தை மாற்றித் தருவதற்காக வங்கி காசாளர் கொண்டு சென்ற ரூ. 25 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடையாறு, சாஸ்திரிநகர் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் கிளையில் காசாளராகக பணிபுரிபவர் இளங்கோவன். நேற்றிரவு ரூ.25 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் நங்கநல்லூர் சென்று கொண்டிருந்தார். மீனம்பாக்கம் அருகே சென்ற போது 4 பேர் காரை வழிமறித்தனர். இளங்கோவன் காரை நிறுத்தியதும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.25 லட்சத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து வங்கி காசாளர் இளங்கோவன் பல்லாவரம் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து இளங்கோவன் பறி கொடுத்தது யாருடைய பணம் என்று போலீஸார் கேட்டதற்கு பதிலளிக்க தடுமாறிய இளங்கோவன், பின்னர் தான் கொண்டு வந்த பணம் கணக்கில் உள்ள பணம் இல்லை என்றும் எனக்கு தெரிந்த விஐபிக்கு சொந்தமான பணத்தை மாற்றி கொடுப்பதற்காக கொண்டு சென்றது என்றும் தெரிவித்தார்.

நங்கநல்லூரில் உள்ள ஒரு வங்கி மேலாளர் இந்த பணத்துக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை தர சம்மதித்ததாகவும். இந்த பணபரிமாற்றத்துக்காக பணத்தை கொண்டு சென்றபோது தான் 4 பேர் வழிப்பறி செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து வங்கியில் கேட்டதற்கு எந்த தகவலையும் தர மறுத்துவிட்டனர். போலீஸாரும் எந்த தகவலையும் கூற மறுத்து வந்தனர். இந்நிலையில், தற்போது விஷயம் வெளியே தெரிந்து விட்டதால் ரூ.25 லட்சம் பணம் கொண்டு சென்றது பற்றி வருமான வரித்துறையினர் வங்கி ஊழியர்கள் 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!