Bank loans with subsidy for the construction of Borewells for the backward and marginalized, small farmers; Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக்கொள்ள அதிகபட்சம் ரூ.1.00 இலட்சம் வரை வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீத அரசு மானியம் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன் பெற சாதி, இருப்பிடம், மற்றும் வருமான சான்றிதழ்கள், வட்டாட்சியரிடம் பெறப்பட்ட சிறு குறு விவசாயி சான்று, விண்ணப்பதாரரின் நில உடைமைக்கு ஆதாரமான கனிணி வழி பட்டா மற்றும் அடங்கல் நகல் ஆகியவற்றுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கவேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!