Bank officials talking like a gang of bank accounts to steal money from the increase in modern method

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வடக்கலூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் வீரப் பாண்டியன் (வயது 58) இவர் வேப்பூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாள ராக பணிபுரிந்து வருகிறார். இவர் பென்னக்கோணம் கிராமத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி) கிளையில் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளார். அதே போல் வப்பைக்குடிக்காடு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) கிளையிலும் கணக்கு வைத்து உள்ளார். இரண்டு வங்கிகளிலும் முறையே ஐ.ஓ.பியில் ரூ. 45 ஆயிரத்தி 996ம் , எஸ்.பி.ஐ யில் ரூ. 54 ஆயிரத்தி 997 ம் பணம் இருப்பு வைத்து உள்ளார்.

இந்நிலையில் கடந்த 18ந் தேதி காலை 10.27 மணிக்கு 8342079023 என்ற எண் தொலைபேசியில் இருந்து வீரபாண்டியன் தொலைபேசி எண்ணிற்கு வங்கியில் இருந்து பேசுவதாக அழைப்பு வந்தது . அப்போது உங்களது வங்கி கணக்கு ஏ.டி.எம் கார்டு முடக்கப்பட்டு உள்ளது. அதை செயல்பாட்டிற்கு கொண்டு வர ஏ.டி.எம் கார்டில் உள்ள 16 இலக்க எண்ணை கூறுங்கள் என்று கேட்டனர். அதன்படி ஐ.ஓ.பி ஏ.டி.எம் நம்பர்களையும் பின்புறம் உள்ள கடைசி மூன்று எண்களையும் கூறினார். பின்பு வேறு எதாவது வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்றீர்களா என்றும் கேட்டனர். அதற்கு ஆமாம் என்று கூறி எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் கார்டில் 10 இலக்க எண் மற்றும் பின்புறம் உள்ள கடைசி 3 எண்கனையும் கூறினார். மேலும் தற்போது 6 இலக்க எண் வரும் அவற்றை உடனடியாக கூறினால் உங்களுடைய ஏ.டி.எம் கார்டு லாக் ஆகாது என்று கூறியதன் பேரில் 6 இலக்க எண்ணையும் வீரபாண்டியன் கூறினார்.

அதன் பின்பு அதே தேதியில் அவரது ஐ.ஓ.பி வங்கி கிளை கணக்கிலும், எஸ். பி. ஐ வங்கி கிளை கணக்கிலும் உள்ள ரூ. 1 லட்சத்து 993 ஐ நான்கு, நான்கு முறையாக பணத்தை எடுத்து விட்டனர்.

பின்னர் வீரபாண்டியனுக்கு அழைப்பு வந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பணத்தை ஏன் எடுத்தீர்கள் என்று கேட்டு உன்னார். அதற்கு நாளை 19 தேதி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறி போனை துண்டித்து விட்டார்.

இது குறித்து உடனே அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கூறி உள்ளார். அப்போது ஞாயிற்றுகிழமை வங்கியில் இருந்து எப்படி தொடர்பு கொள்வார்கள் என்றும், ஏதோ ஏமாற்றும் பேர்வழி உள்ளவர்கள் ரகசிய எண்ணை கேட்டு அதன் மூலம் இரண்டு வங்கி கணக்குகளிலும் எடுத்தது தெரிய வந்தது.

பின்னர் வீரபாண்டியன் இரண்டு ஏ.டி.எம் கார்டுகளையும் செயல்படா வண்ணம் செய்து உள்ளார்.

மேலும் இது குறித்து வீரபாண்டியன் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்தரா விடம் என்னை ஏமாற்றி மோசடி செய்யும் நோக்கில் விபரம் தெரியாத என்னிடம் ரகசிய எண்ணை கேட்டு பணத்தை நூதன முறையில் பணத்தை திருடி விட்டனர். மேலும் மோசடி செய்த நபரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தருமாறு புகார் மனு கொடுத்து உள்ளார்.

இதே போன்று கடந்த வாரம் எசனையை சேர்ந்த ஒருவரிடம் 96 ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் இருந்து அபகரிப்பு செய்துள்ளனர். மேலும், மாவட்டத்தின் பல பகுதிகளில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் சைபர் கிரைம் போலீசார் மெத்தனப் போக்கை காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும். இதே போன்று கடந்த ஆண்டு திருச்சி போலீசாரிடம் போன் செய்து சேட்டையை காட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!