பாஜக தமிழகத்தில் காலுன்றுமா என்பதை விட திருநாவுக்கரசர் காங்கிரசில் முதலில் காலூன்றட்டும் என தமிழிசை சவுந்திரராஜன் பெரம்பலூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
பெரம்பலூரில் பாரதீய ஜனதா கட்சியின் அரசியல் பயிற்சி முகாம் 4 நாட்கள் நடந்து வருகிறது. பயிற்சி முகாமிற்கு பின்பு மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் 400 பேர் முழுநேர ஊழியர்களாக தீனதயாள் உபாத்தியாவின் 100 ஆண்டையொட்டி பணியாற்ற இருக்கிறார்கள், அடிப்படை கட்டமைப்பை பலம் பொருந்தியதாக மாற்றி தமிழகத்தில் மாபெரும் சக்தியாக பா.ஜ.க உருவெடுத்து வருகிறது. வாக்கு சதவீதத்தை பாதிக்காத வகையில் சற்றே அதிகப்படுத்தி இருக்கிறோம் என்ப உணருகிறோம். மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் மாநிலத்தில் (தமிழ்நாடு) பல நல்ல திட்டங்களை கொண்டு இந்தாலும், தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி குறிவைத்து தாக்ப்படுகிறது. மத்திய அரசு மாநிலத்திற்கு எதுவும் செய்யவில்லை என்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு பல இயக்கங்கள், பல நிறுவனங்கள், பல அமைப்புகள் முயன்று வருகின்றன. ஏனென்றால் இன்றைய காலக்கட்டத்தில், பாரதீய ஜனதாக் கட்சியின் வளர்ச்சி தமிழகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசு பொருத்தமட்டில் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொடுத்துள்ளார்கள். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி தமிழகத்தில் அதங்கான இடம் தேர்வு செய்யும் நிலையில் உள்ளோம். இந்தியா முழுவதும் முதியவர்களுக்கான மருத்துவமனை இரண்டு அமைய உள்ளது. அதில் (சென்னை) கிண்டியில் அமைக்கப்பட உள்ளது. மருத்துவப் பூங்கா ஸ்ரீபெரும்புதூரில் 300 ஏக்கர் பரப்பளவில் மத்திய அரசு ஏற்படுத்துகிறது. ஜல்லிக்கட்டை கொண்டு வருவதில் முக்கிய பங்கு மத்திய அரசிடம் உள்ளது. மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்றால் இந்த ஜல்லிகட்டை கொண்டு வந்திருக்க முடியாது. அதனை உணர்ந்துதான் நமது முதல்வர் (பன்னீர்செல்வம்) பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்து கொண்டிருக்கிறார். அதே போல் ஜல்லிக்கட்டு அமைப்புகளும் இதனை உணர வேண்டும். பாரதீய ஜனதாக் கட்சி மாநில அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை கொடுத்து இருக்கிறது. மத்திய அரசு சிறுவாணி, மேகதாது முல்லைப் பெரியார், பவானி , பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் அணைக்கட்டுகள் தடுத்து நிறுத்தப்பட்டு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் எந்த மாநிலமும் வஞ்சிக்காத வகையில் மத்திய நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக தென்னக நதிகள் இணைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க முயற்சி பாராட்ட தக்கது. விவாசயிகளின் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். நாம் குறிப்பிட்ட நீரை அண்டை மாநிலத்தில் இருந்து பகிர்ந்து வருகிறோம். ஆனால், நமது நீர்நிலைகள் தூர் வாராப்படாமல் உள்ளது. ஆந்திராவை போல் நீர்நிலைகளையும், நதிகளையும் இணைக்க வேண்டும். விவசாயிகளுக்கு மத்திய பட்ஜெட் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது. தமிழக அரசியல் சூழ்நிலைய பொருத்தமட்டில் பாரதீய ஜனதாக் கட்சி தமிழகத்தில் காலுன்ற முடியாது. அண்ணன் திருநாவுக்கரசர் காங்கிரசில் காலூன்றட்டும், அப்புறம் பாஜக காலூன்றவது இல்லையா என்பதை பார்க்கட்டும். பாஜக அதிமுகவில் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கிறது, முதல்வருக்கும் பொதுச்செயலாளருக்கும் பிரிவை உண்டாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டுகிறார். அவரின் கட்சியை அவர் முதலில் பார்க்கட்டும், காங்கிரசை விட அதிமுக பார்த்து கவலைப்படுவதாக தோன்றுகிறது என தெரிவித்தார். அப்போது பெரம்பலூரை சேர்ந்த பா.ஜ.க., பிரமுகர்கள் கோட்டத்தலைவர் சிவசுப்பிரமணியன் உட்பட பலர் உடன் இருந்தனர்.