BJP Union executive committee meeting of the party’s in Perambalur
பாரதிய ஜனதா கட்சியின் பெரம்பலூர் ஒன்றிய செயற்குழு கூட்டம் சமீபத்தில் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் விருந்தினர் மாளிகையில் நடந்தது.
கூட்டத்திற்கு பெரம்பலூர் ஒன்றிய தலைவர் எஸ்.கலைச்செல்வன் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் சாமி.இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.கலியபெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர் சி.சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.
தேசிய பொதுக்குழு உறுப்பினரும், கோட்ட பொறுப்பாளருமான எஸ்.சிவசுப்ரமணியம் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையை தேசிய நெடுஞ்சாலையாகஅறிவித்தமைக்கு மத்திய அரசுக்கும், மத்திய நெடுஞ்சாலைத்துறைஅமைச்சருக்கும் நன்றி தெரிவித்தும், பெரம்பலூர் அருகே தேசியநெடுஞ்சாலையிலுள்ள நான்கு ரோடு பகுதியில் கழிப்பிட வசதி செய்து தரவேண்டும்.
நெடுவாசல் கிராமத்தின் வழியாக செல்லும் மருதையாற்றில் கலக்கும் பெரம்பலூர் பாதாள சாக்கடை கழிவு நீரை முழுமையாக சுத்தீகரித்து நிலத்தடிநீர் பாதிக்காத வகையில் வெளியேற்ற வேண்டும்.
பெரம்பலூர் நகரைச்சுற்றி அரை வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை பணியை மேலும் விரிவுபடுத்தி முழுமையாக நகரைச் சுற்றி புறவழிச்சாலை அமைக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் எம்.ஆர்.இளங்கோவன்,பி.எல்.அடைக்கலராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் சி.வாசுதேவன், சி.சிவராமன்,பி.சிவசங்கரன், ஆர்.மணி, மாவட்ட செயலாளர் எஸ்.குருராஜேஷ், எஸ்.ராஜாராம்,மகளிரணி நிர்வாகிகள் சி.சாந்தி, எஸ்.கலாசூரியகுமார், டி.பிரபாகனி மற்றும்மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள்,உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஜெ.சரவணன் பெரம்பலூர் ஒன்றிய பொதுச்செயலாளர் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.