BJP’s party performance in Perambalur show: Rs. 40 lakhs spoil the public tax: MPs also boycotted.

பெரம்பலூர் : பெரம்பலூரில் இன்று தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மத்திய அரசின் ஆண்டு சாதனை விளக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரம்பலூர், சிதம்பரம் தொகுதி எம்.பிக்கள் பெயரை பெயருக்கு கூட அழைப்பிதழில் போடாமல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ராஜ்ய சபா எம்.பியான இல.கணேசன் சிறப்பு அழைப்பாராக கலந்து கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தை எம்.பிக்களை பா.ஜ.க அரசு புறக்கணிக்கவில்லை, மாறாக பெரம்பலூர் மாவட்ட மக்களின் வாக்குகளை புறக்கணித்துள்ளது.

மேலும், அழைப்பிதழில் பா.ஜ.க கட்சி நிர்வாகியான சிவசுப்பிரமணியன் பெயரை விதிகளுக்கு புறம்பாக அழைப்பிதழிலும் அச்சிட்டுள்ளனர்.

விழா ஏற்பாடுகளை மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பா.ஜ.க கமிசன் பெறுவதற்காக விட்டுள்ளது.

ஒரு நிகழச்சிக்கு சுமார் ரூ. 40 லட்சம் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது போன்ற நிகழச்சிக்கு சுமார் 4 லட்ச ரூபாய் அளவிற்கே செலவாகும்.

நிகழ்ச்சியில் 20 பேருக்கு இலவசமாக எரியாயு இணைப்பும், 5 பேர் எரிவளி மானிய வேண்டாம் என தெரிவித்தனர்.

ஒரு பயனற்ற ஒரு நிகழ்ச்சிக்கு பல லட்ச ரூபாய் உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை பாழாடித்திருக்கிறது. பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு.

இது போன்ற பொதுமக்களிடம் ஆதரவு இல்லாத நிகழச்சிகளை நடத்துவதற்கு பல கோடி ரூபாயை வீண் விரயம் செய்து வருகிறது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. கொள்ளை வரி, இந்தி திணிப்பு போன்ற சாதனைகளின் மூலம் மக்கள் எதிர்ப்புகளை சம்பாதித்து வருவது போதாது என்று மாட்டிறைச்சி விவாகாரத்திலும், சிக்கி உள்ளது.

காலையில் அரசு சாதனை நிகழச்சி என பா.ஜ.க கட்சி நிகழ்ச்சியே நடத்தப்பட்டது. மீண்டும், அதே மண்டபத்தில் மதியத்திற்கு பிறகும் கட்சி நிகழ்ச்சிகளை பா.ஜ.கவினர் அரசு பணத்தை கொண்டே நடத்தினர். பொதுமக்கள் ஏற்க மாட்டார்கள்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்ய சாபா எம்.பி இல.கணேசன் பேசியதாவது :

தஞ்சாவூருக்கு புதிய இருவழிப்பாதை தேசிய நெடுஞ்சாலை :

விழுப்புரம் அருகே உள்ள விக்கரவாண்டியில் இருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூருக்கு புதிய இருவழிப்பாதை தேசிய நெடுஞ்சாலையின் பணிகள் அங்கீகரிக்ப்பட்டு, தொடங்கப்பட உள்ளது, என்றும் தெரிவித்த அவர், ரஜினி அரசியல் பிரவேசம் கேட்தற்கு அத்தைக்கு மீசை முதலில் முளைக்கட்டும் பிறகு பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் சிறந்த நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால், அடுத்த ஆண்டு மருத்துவக் கல்வியில் தமிழகத்தை சேர்ந்த அதிக மாணவர்கள் சேர்க்கை பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!