Blood donation camp on behalf of KMDK near Namakkal
நாமக்கல் அருகே உள்ளள புதுச்சத்திரத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி, கொங்குநாடு காக்கும் கரங்கள் மற்றும் புதன்சந்தை அரிமா சங்கத்தின் சார்பில் புதுச்சத்திரம் அரசு துவக்கப்பள்ளியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
கொமதேக மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் முகாமை துவக்கி வைத்தார். அரிமாசங்க மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் சுந்தர்ராஜ், புதன்சந்தை அரிமா சங்க தலைவர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் அரசு டாக்டர்கள் அன்புமலர், சுதா, கொமதேக நிர்வாகிகள் பால்கந்தசாமி, குரு இளங்கோ, பிரகதீஸ்வரன், அசோகன், சாமி, பெரியசாமி, மணி, சுரேஸ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கெண்டனர்.