Books will be provided to all students while opening schools tomorrow: Chief Educational Officer

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என 6ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 141 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.

இதில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகள் என மொத்தம் 96 பள்ளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த 96 பள்ளிகளில் மொத்தம் 38,900 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்க 2,52,000 புத்தகங்களும், 1,44,000 நோட்டுகளும், ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு செட் சீருடை வீதம் 36,000 சீருடைகளுகம் வரப்பெற்று, இவையனைத்தும் சம்மந்தப்பட்;ட பள்ளிகளின் மாணவ-மாணவியர; எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்துப்பள்ளிகளுக்கும் முறையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் நாளை திறக்க உள்ள நிலையில் அனைத்துப்பள்ளிகளிலும் புத்தகங்கள், சீருடைகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்க தயார; நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை(7.6.2017) அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்படும்.

மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் முறையாக புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்ய முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் 20 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் நாளை அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று விலையில்லா பொருட்கள் மாணவ-மாணவிகளுக்கு முறையாக வழங்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!