Brain fever near Namakkal: kills 11th grade student in Government school
நாமக்கல் அருகே மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளி 11ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள புதுக்கோட்டை ஊராட்சி காளிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சத்திய மூர்த்தி. இவருடைய மகன் பரத்(16). இவர் வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்புபடித்தல் வந்தார்.
இந்த நிலையில் மாணவர் பரத்துக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது மூளை காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த மாணவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கு அந்த மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். எருமப்பட்டி அருகே மூளை காய்ச்சலுக்கு 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.