Breaking out of the house lock in Perambalur, jewelery and money theft: mystery persons tampering!

பெரம்பலூர், 4 ரோடு அருகே உள்ள முத்துலட்சுமி நகரில் பார்த்தீபன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோமாஸ்கந்தன் என்பவர் வீட்டில் முதல் தளத்தில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், உதவியாளராக உள்ளார். நேற்றிரவு வீட்டின் கதவை சாத்திவீட்டு தூங்க சென்றார். பின்னர், அதிகாலை எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த தாலி 6 பவுன், தங்க சங்கிலி 6 பவுன் உள்பட 12 பவுன் தங்கநகை மற்றும் ரொக்கம் ரூ. 10 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து சோமஸ்கந்தன் மனைவி மைதிலி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி குடியிருப்புவாசிகளிடையு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.