breaking the glass in a parked car robbery of Rs 1.70 lakh: police detained
பெரம்பலூர், எளம்பலூர் சாலையில் உள்ள முத்து நகரை சேர்ந்தவர் பெருமாள் மகன் ஜவஹர் (வயது 45), பெரம்பலூரில் எல்.ஐ.சி முகவராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனது நிறுத்தி வைத்து விட்டு அலுவல் தொடர்பாக சென்று வந்தார். திரும்பி வந்து காரை எடுக்க முயற்சித்த போது காரின் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு, காரினுள் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து, ஜவஹர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் அக்கம்பக்கம் கடைகளில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தீவிர தேடி வருகின்றனர். காரில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.