Breaking the lock of a house in Perambalur and robbing 17 pounds, Rs 30 thousand in cash!

பெரம்பலூர், வடக்குமாதவி சாலையில் உள்ள வெற்றி நகரை சேர்ந்தவர் முஹம்மது இப்ராஹீம் (வயது 33). இவர் பெரம்பலூரில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜெய்துல், பல் மருத்துவராக உள்ளார். இவர்களுக்கு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இதனால், ஜெய்துல், அவரது வீட்டில் இருந்து மூன்று வீடு தள்ளி உள்ள தாயார் வீட்டில் தங்கியுள்ளார். வீட்டை தினமும் இரவு 7.30 மணிக்கு பூட்டி விட்டு மறுநாள் காலை வந்து பார்த்துச் சென்றுள்ள, நிலையில் இன்று காலை 07.15 மணிக்கு வந்த பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள் இருந்த பீரோக்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு அதில், இருந்த 2 பவுன் வளையல், 11 கிராம் பிரேஸ்லெட், 1 பவுன் கொலுசு, 1.5 பவுன் நெக்லஸ், ஒன்றேகால் பவுன் செயின், 3 பவுன் தோடு மாட்டல், 5.5 பவுன் முத்து வைத்த நெக்லஸ் என மொத்தம் 17 பவுன் தங்கநகைளும், ரொக்கம் ரூ. 30 ஆயிரமும், திருடு போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கைரேகை, தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணம் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!