Breaking the lock of the house locked in Perambalur 16.5 pound jewelry theft: police investigation
பெரம்பலூரில் பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து 16.5 பவுன் நகை திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் – நான்கு ரோடு பகுதியில் உள்ள ராஜா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜா (வயது 29), எலக்ட்ரிசியன். ஒப்பந்த பணிகளையும் செய்து வருகிறார். வாடகை வீட்டில் வசித்து வரும் அவர் கடந்த 11ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு ஒப்பந்த பணிக்காக சென்று விட்டார். அவரது மனைவி ஜெயரேவதியை துறைமங்கலத்தில் உள்ள மாமனார் வீட்டில் பாதுகாப்பு கருதி விட்டு சென்றிருந்தார்.
இந்நிலையில் இன்று மதியம் திரும்பி வந்து வீட்டை பார்த்த போது உள்பூட்டுக்கள் மட்டும் உடைக்கப்பட்டு, வெளிப்பூட்டுகள் அப்படியே இருந்தன. கதவை திறந்து வீட்டினுள் பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த பதினாரை பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை தெரிந்த ராஜா பெரம்பலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தடய அறிவியல் நிபுணர்களுடன் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காணமல் போன நகைகளின் மதிப்பு சுமார் 3.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
பூட்டியிருந்த வீட்டினுள் நகைகள் கொள்ளையடிக்கப்ட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.