Breastfeeding Week Festival: Perambalur Collector launches awareness video vehicle

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வீடியோ வாகனத்தினை கலெக்டர் வெங்கட பிரியா பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலையில் இன்று (04.08.2021) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் – தேசிய ஊட்டச்சத்து குழுமத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வார விழாவாக கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டிற்கான கருத்துரு (தாய்ப்பால் கொடுப்பதை பாதுகாப்போம் – இது அனைவரின் பொறுப்பாகும்). இந்த வாகனம் துறைமங்கலம் டி.இ.எல்.சி பள்ளி வளாகம், எசனை,
அனுக்கூர் வாலிகண்டபுரம், லப்பைக்குடிகாடு, குன்னம், ஆதனூர், வழியாக மேலமாத்தூர் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக அரசு அலுவலர்கள் தாய்பால் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்த கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் தி.புவனேஸ்வரி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், போஷான் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், திட்ட உதவியாளர்கள், வட்டார மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!