Candidates also pass a private examination can be downloaded via the web site

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்துள்ள தகவல் :

நடைபெற உள்ள மார்ச் 2017 மேல்நிலை பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித் தேர்வுகள் 25.01.2017 முதல் 29.01.2017 வரை www.dge.tn.gov.in , என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இக்கால அவகாசம் முடிவுற்ற பின்னர், தேர்வுக் கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள இயலாது. எனவே தேர்வர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மேற்குறிப்பிட்டுள்ள கால அவகாசத்திற்குள் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை தவறாது பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

www.dge.tn.gov.in, என்ற இணைய தளத்திற்கு சென்று HALL TICKET DOWNLOD என்ற வாசகத்தினை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள HIGHER SECONDARY EXAM MARCH- 2017 -PRIVATE CANDIDATE HALL TICKET PRINT OUT என்ற வாசகத்தினை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்தால் அவா;களுடைய தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு செய்முறைத் தேர்விற்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பபாளரை அணுகி அறிந்து கொள்ளவேண்டும்.

உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் .மேலும் மார்ச் 2017 பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை http://www.dge.tn.gov.in, என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!