Car crashes between 2 trucks: 4 killed! The baby survived !! Incident near Perambalur !!
பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை நடந்த கொடூர விபத்தில் 2 லாரிகளுக்கு இடையே சிக்கிய காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த வாய்க்கால் கால் தெருவை சேர்ந்த முனியப்பன் (48), பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி கலைவாணி(40), மகள் ஹரிணி(13), தாய் பழனியம்மாள் (68) மகன் கார்முகிலன் (5) ஆகிய 5 பேரும் இன்று அதிகாலை சொந்த ஊரான கரூருக்கு சென்று விட்டு, சீர்காழிக்கு மாருதி ஸிப்ட் காரில் சென்றுக் கொண்டிருந்தனர். காரை முனியப்பன் ஓட்டினார்.
கார், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை டோல்கேட் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, கேராளாவில் இருந்து, கெமிக்கல் பவுடரை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற ஈச்சர் லாரியின் பின்னால் பைனான்சியர் முனியப்பன் ஓட்டிச்சென்ற ஸ்விப்ட் கார் நின்றிருந்த நிலையில், தூத்துக்குடியில் இருந்து சுண்ணாம்புக்கல் ஏற்றிக் கொண்டு பரங்கிப்பேட்டை நோக்கி அதிவேகமாக சென்ற பாரத் பென்ஸ் லாரி ஸ்விப்ட் காரின் பின்பகுதியில் பலமாக மோதியது. இதில் நிலைகுலைந்த ஸ்விப்ட் கார் முன்னால் இருந்த லாரிக்கும், பின்னால் வந்த லாரிக்கும் இடையே சிக்கி விபத்துக்குள்ளானது.
எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த திடீர் கோர விபத்தில், காரில் இருந்த முனியப்பன். அவரது மனைவி கலைவாணி, மகள் ஹரிணி, தாய் பழனியம்மாள் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடிக்க உயிரிழந்தனர்.
முனியப்பனின் மகன் கார்முகிலன்(5), மட்டும் கால் முறிவு ஏற்பட்டு படுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து, தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் மற்றும் விபத்து மற்றும் தீயணைப்பு மீட்டு படையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காரில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். கார்முகிலன் சிகிச்சைக்காக அரசு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை போலீசார் சீர் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஏடிஎஸ்பி பாண்டியன் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
பெரம்பலூர் அருகே தொடர்ந்து விபத்துக்கள் தற்போது அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள், இரவு நேர பயணத்தின் போது போதிய ஓய்விற்கு பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும். அவரசத்தில் கிளம்புவதை தவிர்க்க வேண்டும்.
உரிய வேகத்தில் செல்வதோடு, சென்றடையும் நேரத்திற்கு முன்பாக திட்டமிட்டு புறப்படுவதே நல்லது. திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்பட காரணம், சொந்த வாகனங்களை இயக்குபவர்கள் போதிய பயிற்சி எடுத்துக் கொண்டு இயக்குவது நல்லது. அதோடு, பயிற்சி இல்லாதவர்கள் ஆக்டிங் டிரைவர்களை வைத்து காரை ஓட்டி செல்வது நல்லது.
கண் கெட்ட பிறகு சூர்யநமஸ்காரம் என்பது போல் அல்லாமல் விபத்து ஏற்பட்ட பின்பு வருத்துவது பயன்தராது. ஒரு விபத்து பலரின் வாழ்க்கையை புரட்டி போட்டு, திசை மாற செய்துள்ளது.