Cauvery Management Board in the form of signatures on behalf of the requesting TMC Perambalur
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி த.மா.க சார்பில் கையெழுத்து இயக்கம் பெரம்பலூரில் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கையெழுத்து இயக்கம் இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்டத் தலைவர் வி.கிருஷ்ணஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. இதில், காவரி மேலாண்மை வாரியம் மத்திய, மாநில அரசுகள் அமைத்திட வலியுறுத்துவது தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டு பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டது.
அப்போது, மாநில கொள்கை பரப்பு செயலாளர் காரை.சுப்பிரமணியன், வட்டார தலைவர் ஆர்.சித்தார்த்தன், மற்றும் கட்சி பிரமுகர்கள் அசோகன், செல்வராஜ், பெரிய திருமூர்த்தி, இளவரசன், மோகன், செந்தில், நகரத் தலைவர் மகேஷ்பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.