Celebration of Nehru Birthday behalf Namakkal East District Congress
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் நேருபிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ஜவர்கலால் நேரு பிறந்தநாள் விழா நேரு பூங்காவில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம்,நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராம்குமார் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஷேக்நவீத் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதனைதொடர்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட சேந்தமங்கலம், பாச்சல், ராசிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகங்கங்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட துணைத்தலைவர் மாணிக்கம்,மாவட்ட பொருளாளர் கமல்நாத், கேபிள்ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.