Central Government to abandon road safety bill Driving movement: Public disaster

பெரம்பலூரில் மத்திய அரசின் புதிய சாலை பாதுகாப்பு மசோதாவை கைவிடக்கோரி மோட்டர் வாகன பாதுகாப்பு சங்கம் மற்றும் மோட்டார் தொழில் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் 10.10.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் புதிய சாலை போக்குவரத்து பாதுகாப்பு சட்ட மசோதா-2017-லில் வாகனப்பதிவு, எப்சி, லைசன்ஸ் உள்படஅனைத்தும் பன்னாட்டு முதலாளிகளுக்கு மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் இந்த சட்டத்தால் பயணிகள் வாகனம், சரக்கு வாகனம், வேன், ஆட்டோ, டாக்சி, லாரி, கன்டெய்னர் என அனைத்து வாகன ஓட்டுநர்களும் கார்பரேட் கம்பெனிகள் வசம் அடிமையாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டூவிலர், கார் மற்றும் கனரக வாகனங்களான லாரி, பஸ் ஸ்பேர்பாட்ஸ் விற்பனை செய்யும் சிறுவியபாரிகள், டூவிலர் மெக்கானிக், வெல்டர், டயர் பஞ்சர், டிரைவிங் ஸ்கூல், பெயிண்டர், டிங்கர், எலக்ட்ரீசியன் என அனைவரும் தொழிலை இழந்து கார்ப்ரேட் முதலாளிகளிடம் அடிமையாகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மோட்டர் வாகனம் சம்பந்தமாக அனைத்து அபராதங்களும் ரெட்டிப்பாகும். உரிமம் பறிபோகும் போன்ற நிலை ஏற்படும். இந்த சட்டத்தால் தொழில்கள் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே இந்த புதிய சாலை பாதுகாப்பு மசோதாவை கைவிடக்கோரி பெரம்பலூர் மாவட்டத்தில் மோட்டர் வாகன பாதுகாப்பு சங்கம், தொழில் சங்க ஒருங்கிணைப்பு குழு மற்றும் சிஐடியு சார்பில் 10.10.2017 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம், ஷேர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்கம், 407 வேன் ஓட்டுநர்கள் சங்கம், சுமோ, டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், டாடாமேஜிக், டாட்டா ஏசி வாகன ஓட்டுநர்கள் சங்கம் போன்ற சங்கத்தை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டதால் இந்த சங்கங்களை சேர்ந்த ஷேர் ஆட்டோ, வேன் உட்பட 700க்கு மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. மேலும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்க தலைவர் அர்ச்சுணன் மற்றும் சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி தலைமையில் பெரம்பலூர் நகர முக்கிய பகுதிகளில் பொதுமக்களிடம் மத்திய அரசின் புதிய சாலை பாதுகாப்பு மசோதாவை கைவிடக்கோரியும், அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. பின்னா; மாலை பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!