பெரம்பலூரில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் நுண்கலைகள் பயிற்சி பெற்ற 159 சிறுவர் – சிறுமியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஜவகர் சிறுவர் மன்றம் வெங்கடேசபுரத்தில் உள்ள அரசு இசைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் வாரவிடுமுறை நாட்களில் மாணவ – மாணவியருக்கு நுண்கலை பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் நுண்கலை பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குனர் குணசேகரன் அறிவுரையின் பேரில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த சித்திரை பவுர்ணமி தினத்தில் தொடங்கி பத்து நாட்கள் தொடர்ந்து நடந்தது.

இந்த சிறப்பு முகாமில் தினமும் காலை 10மணிமுதல் மதியம் 1 மணிவரை குரலிசை, நடனம், ஓவியம், சிலம்பம் ஆகிய நுண்கலைகளில் 5 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமியருக்கு பயிற்சிஅளிக்கப்பட்டது. பரதஆசிரியை அன்புசெல்வி, ஓவிய பயிற்றுனர் ஹேமாஸ்ரீ, குரலிசை ஆசிரியா; இலக்கியா, சிலம்பம் பயிற்றுனா; முருகேசன் ஆகியோh; பயிற்சி அளித்தனா;.

இந்த முகாமில் மொத்தம் 159 சிறுவர் – சிறுமியர்கள் பங்கேற்றனர். பயிற்சி நிறைவு விழா இன்று நடந்தது. விழாவிற்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் அரணாரை நடராஜன் வரவேற்றார்.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை திருச்சி துணை இயக்குனர் டாக்டர் மனோகரன் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு முகாமில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசும்போது, இங்கு பயிற்சி பெற்ற சிறுவர் – சிறுமியர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட நுண்கலையை தினந்தோறும் தவறாமல் பின்பற்றவேண்டும்.

இத்தகைய பயிற்சி பெற்றவர்கள் எதிர்காலத்தில் சின்னத்திரை, சினிமா மற்றும் கலைத் துறைகளில் சிறந்த கலைஞர்களாக பரிணாமிக்க முடியும் என்று பேசினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!