Chellam Emu Forms, Valavan Gordon City Assets: General Auction Tomorrow
செல்லம் ஈமு பார்ம்ஸ் மற்றும் வேலவன் கார்டன் சிட்டி டெவலப்மென்ட்ஸ் சொத்துக்கள் பொது ஏலம் விடப்படுகிறது.
நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் செல்லம் ஈமு பார்ம்ஸ் மற்றும் வேலவன் கார்டன் சிட்டி டெவலப்மென்ட்ஸ் என்ற ஈமு நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு கோர்ட்டில் விசாரணையில் இருந்து வருகின்றது.
மேற்கண்ட வழக்கின் அசையும் சொத்தான ஒரு ஸ்பேர் பஸ், ஒரு கார் மற்றும் அசையா சொத்துக்களான நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா, பிள்ளைகளத்தூர் கிராமத்தில் உள்ள தலா 2360 சதுரடிகள் கொண்ட இரண்டு வீட்டுமனைகள் மற்றும் ராசிபுரம் தாலுக்கா காட்டுக்கொட்டாய் கிராமத்தில் உள்ள 3716 சதுரடி கொண்ட ஒரு வீட்டு மனையும் கைப்பற்றப்பட்டு கோயம்புத்தூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பின் பேரில் இன்று 30ம் தேதி செவ்வாய்க்கிழமை பகல் 11 மணிக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் மாடியில், மாவட்ட டிஆர்ஓ மூலம் பொது ஏலத்தில் விடப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.
ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அனைவரும் காலை 10 மணிக்கு திரும்பத்தரக்கூடிய டெபாசிட்டாக காருக்கு ரூ.4 லட்சத்து 80 ஆயிரம், பஸ்சுக்கு ரூ.11 லட்சத்து 60 ஆயிரம், வீட்டு மனைகளக்கு ரூ.15 லட்சம் வீதம் டிஆர்ஓவிடம் ரொக்கமாக செலுத்தி பொது ஏலத்தில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.