Chief Minister of Tamil Nadu will get good judgment on the 16th of the Cauvery issue
காவிரி விவகாரத்தில் வரும் 16ஆம் தேதி தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, நீண்ட இழுபறிக்கு பிறகு காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றத் தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.காவிரி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்து வதற்கான, வரைவு திட்டத்தை இன்று தாக்கல் செய்ய கடந்த மே 8ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, இன்று காலையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜரானார். வழக்கு சுமார் பதினோறு மணியளவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சீலிடப்பட்ட கவரில், காவிரி நதிநீர் வரைவு திட்டத்தை, மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தாக்கல் செய்தார். மேலும், தீர்ப்பை செயல்படுத்தி நதி நீர் பங்கீட்டை உறுதி செய்ய காவிரி ஆணையம், வாரியம் அல்லது குழு அமைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இதையடுத்து, மத்திய அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பதில் தர உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மே 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.இதனிடையே காவிரி விவகாரத்தில் வரும் 16ஆம் தேதி தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புவதாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.