Chief Minister’s relief fund of Rs 9 lakh for 3 families who lost their lives due to electrocution; Presented by Perambalur Collector.

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி அறிவிக்கப்பட்ட 3 குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.9 லட்சம் மதிப்பிலான காசோலையினை கலெக்டர் (பொ) செ.ராஜேந்திரன் கலெக்டர் ஆபிசில் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம், வசிஷ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கரும்பு வயலில் அறுந்து விழுந்த மின் கம்பியினை எதிர்பாராத விதமாக மிதித்ததில் 17.09.2020 அன்று இறந்துவிட்டார். இவரின் மனைவியான தமிழரசிக்கும், மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பிள்ளை மின் பழுதை சரிசெய்யும்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி 06.10.2020 அன்று இறந்துவிட்டார். இவரின் மனைவி சித்ராதேவிக்கும், புஜங்கராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மின் பழுதை சரிசெய்யும் பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி 07.09.202 அன்று இறந்துவிட்டார். இவரின் தந்தை கனகராஜ் ஆகிய மூவருக்கும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 இலட்சம் வழங்கிட ஆணையிடப்பட்டது. அதனடிப்படையில் அந்த வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!