Chinnavenmani New ITI Direct Admission: Perambalur Collector Info!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், சின்னவெண்மணி கிராமத்தில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (SCVT பாடத்திட்டத்தில்) கீழ்கண்ட தொழிற் பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 01.12.2022 முதல் 30.12.2022 வரை நடைபெற்று வருகிறது.

இரண்டு வருட தொழிற்பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் 10- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மின்சார பணியாளர் (Electrician) 20 இடங்களும், பொருத்துநர் (Fitter) 20 இடங்களும், கட்டிடபட வரைவாளர் (Draufts man civil 24) இடங்களும், மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவான தையல் தொழிற்நுட்ப பிரிவில் (Sewing Technology) 40 இடங்கள் உள்ளன. இதற்கு குறைந்தபட்சம் 8- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சேர வரும் பயிற்சியாளர்கள் கீழ்காணும் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம் 4,

சேர்க்கை கட்டணமாக ஓராண்டு தொழிற் பிரிவுக்கு ரூ.185–ம், ஈராண்டு தொழிற் பிரிவுக்கு ரூ. 195–ம் செலுத்த வேண்டும். தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கைக்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பெரம்பலூர். அலைபேசி எண்: 9499055881. முதல்வர் (கூடுதல் பொறுப்பு) , அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், குன்னம். அலைபேசி எண்: 9047949366 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!