“Clean service” operating pledges: Perambalur Collectorate staff on acceptance

இந்திய அரசின் உத்தரவுப்படி செம்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் தூய்மையே சேவை என்ற தலைப்பின் கீழ் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களையும் விதமாகவும்,

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் ‘வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீர் நிலைகள் மற்றும் இதர பொது இடங்களில் தூய்மையைக் கடைபிடிப்போம்! என்றும்,

வீடுகளில் இரட்டை உறிஞ்சு குழிகளுடன் கூடிய கழிப்பறைகளைக் கட்டுவதுடன், அவ்வாறு கழிப்பறைகள் கட்டாதவர்களையும் கழிப்பறைகள் கட்டச் செய்து, திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற கிராமங்களும், நகரங்களும் உருவாக்கப் பாடுபடுவோம்! என்றும்,

கழிப்பறை பயன்படுத்துவதுடன், கை, கால்களை சுத்தமாகக் கழுவுதல் மற்றும் இதர சுகாதார பழக்கங்களையும் கடைபிடிப்போம்! என்றும், “குறைத்தல், மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாடு” என்ற கோட்பாட்டின்படி திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை திட்டத்தினை பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவோம் என்றும் உறுதி ஏற்போம்!! என மாவட்ட வருவாய் அலுவலர் உறுதிமொழி வாசிக்க அவரை பின் தொடர்ந்து அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி வாசித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

15.9.2017 முதல் 02.10.2017 வரை மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளில் அனைத்துத்துறை அலுவலர்களும் தங்கள் அலுவலகம் மற்றும் முக்கியப்பகுதிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக 17.9.2017 அன்று சேவை தினமாக அனுசரிக்கப்படவுள்ளது.

அன்றையதினம் மாவட்ட ஆட்சியர் தூய்மை ரதத்தினை கொடியசைத்து துவக்கி வைப்பார். மேலும், மாவட்டத்தின் பல பகுதிகளில் கழிப்பறைகள் இல்லாத பகுதிகளை தேர்ந்தெடுத்து கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

18.9.2017 முதல் 24.9.2017 வரை அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து தூய்மைப்பணி மேற்கொள்ளல் என்ற தலைப்பில் மாவட்டத்தின் முக்கியப்பகுதிகளில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக கல்வி நிலையங்கள், மாணவ விடுதிகள், அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், மருத்துவ மனைகள் ஆகிய பகுதிகளில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும்.
25.9.2017 மற்றும் 26.9.2017 முதல் 1.10.2017 வரை சுற்றுலாத்தலங்கள், கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதி தூய்மையே சேவை பிரச்சார சேவை நிறைவடையும். இந்த துhய்மை திட்டத்தின் செயல்படுத்தும்போது பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பையும் அளிக்கும் வகையில் அனைவரும் இப்பணியில் ஈடுபடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன், அனைத்து வட்டாட்சியர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!