Closing day of the ceremony special manuniti noccikkulam 1.5 crore welfare payments

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா ஆலத்தூர் வட்டம், நொச்சிக்குளம் கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் க.கந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பிறபடுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, புதுவாழ்வுத்திட்டம், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பிற்பட்டோர் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறை, சமூக நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் உயர் அலுவலர்களும் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன் பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளா;ச்சித் துறையின் கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் தனி நபா; இல்லக் கழிவறை கட்டுமான பணிகள் மற்றும் வளர;ச்சிப்பணிகளுக்கான பணி ஆணைகள் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் 540 பயனாளிகள் மற்றும் திட்டங்களுக்கு ரூ.89,34,000- மதிப்பில் நலத்திட்டங்களையும்,

கால்நடை பராமரிப்புத் துறையின் நாட்டுக்கோழி வளர்ச்சித் திட்டத்தின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.32,375- மதிப்பிலான கடன் தொகையும், கூட்டுறவுத் துறையின் கீழ் பயிர்க் கடன் திட்டத்தின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.3,53,460- கடன் தொகையும்,

தொழிலாளர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.23,500- உதவித் தொகையும், தோட்டக் கலைத்துறை மூலம் 7 பயனாளிகளுக்கு ரூ.6,01,680- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், பால்வளத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.7,500- மதிப்பிலான பால் சேகரிக்கும் குடுவைகளும்,

புதுவாழ்வுத் திட்டத்தின் அமுதசுரபி கடன் மற்றும் மாற்றுத்திறனாளி நலிவுற்றோர் தனிநபர் கடன் திட்டங்களின் மூலம் 7 பயனாளிகளுக்கு ரூ.3,50,000- மதிப்பிலான கடன் தொகையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.11,550- மதிப்பிலான சலவைப் பெட்டிகளும், மாவட்ட மாற்றுத்திறனாளி துறையின் இலவச காதொலிக்கருவி வழங்கும் திட்டம் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.14,680- மதிப்பிலான கருவிகளும், மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறும் திட்டம் மூலம் 6 பயனாளிகளுக்கு ரூ.93,600- மதிப்பிலான உதவி தொகைகளும்,

வருவாய்த் துறையின் இலவச வீட்டுமனைப் பட்டா, சாலை விபத்து நிவாரண உதவித் தொகை திட்டங்கள் மூலம் 27 பயனாளிகளுக்கு ரூ.9,00,000- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைத்துறையின் தேசிய வேளாண் வளா;ச்சித் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் 17 பயனாளிகளுக்கு ரூ.8,05,000- மதிப்பிலான விசைத்தெளிப்பான், டிராக்டர், சுழற்கழப்பை, சோலார் பூச்சி பிடித்தல் பொறி விளக்கு வழங்கியும்,

வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கு ரூ.29,43,380ஃ- மதிப்பிலான வாடிக்கையாளர்கள் இயந்திர சேவை மையம் மற்றும் சூரிய ஒளி மூலம் இயங்கும் மோட்டார்கள் போன்ற உதவிகள் வழங்கியும் என 643 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1,50,70,725- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இவ்விழாவில் மொத்தம் 540 மனுக்கள் பெறப்பட்டு, 29 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் 376 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 135 மனுக்கள் உரிய விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய நபர்களுக்கு உடனடியாக பதிலலிக்கப்படும்.

இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!