Co-operative Society members Meeting at Venbavur near Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் 64 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் சந்திப்பு முகாம் நடைபெற்றது.

சங்க செயலாளா; வி.கணேசன் அனைவரையும் வரவேற்றார். சங்க தலைவர் கோ.லோகநாதன் முன்னிலை வகித்தார். முன்னதாக கூட்டுறவு சார்பதிவாளர் அறப்பளி உறுதிமொழி வாசித்தார்.

கூட்டுறவு சங்க பெரம்பலூர் மண்டல இணைப் பதிவாளர் பெரியசாமி தலைமையேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது கூட்டுறவு சங்கமானது 1924 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்ட்டு உறுப்பினர்கள், பணியாளர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்களின் வழிகாட்டுதல் போன்ற பங்களிப்போடு படிப்படியாக வளர்ந்து இன்னும் ஏழு ஆண்டுகளில் 100 வது ஆண்டுவிழா கொண்டாடப்பட உள்ளது.

மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கூட்டுறவு பயிர் சங்கம், பால் உற்பத்தியாளர்கள் சங்கம், நகர கூட்டுறவு சங்கம், ஆடு வளர்ப்போர் சங்கம், கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் என அனைத்து கூட்டுறவு சங்கங்களின் மூலம் பொதுமக்களுக்கு கடன் வழங்கி அவர்கள் அடிப்படை பொருளாதார வசதிகளை மேம்படுத்தி தன்னிறைவு அடைய செய்வதே கூட்டுறவு சங்கத்தின் நோக்கமாகும்.

அந்த வகையில் வெண்பாவூர் கூட்டுறவு சங்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக லாபத்தில் செயல்பட்டு வருவதால் உறுப்பினர்களுக்கு 14 சதவீதம் ஊக்கத்தொகை வரும் ஜனவரி மாதத்திற்குள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதில் பங்கேற்ற உறுப்பினர்கள் கூட்டுறவு சங்கத்தில் கல்விக் கடன் வழங்க வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர். 500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சார்பதிவாளர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!