collector consultation with the staff to celebrate Republic Day Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினம் எதிர்வரும் 26.01.2018 அன்று கொண்டாப்படுவதை முன்னிட்டு, விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்தது.

நடைபெற உள்ள குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஏதுவாக அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் விழா நடைபெறும் அன்று காவல் துறையினர் மூலம் காவல் துறை அணிவகுப்பு, ஊர்காவல் படையினரின் அணிவகுப்பு உள்ளிட்டவற்றை சிறப்பாக நடத்திட காவல்துறையினர் தகுந்த ஏற்பாடு செய்திட வேண்டும். விழா நடைபெறவுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தகுந்த முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், விழா நடைபெறும் மேடை, தியாகிகள் அமரும் இடம், பயனாளிகள் அமரும் இடம் ஆகியவற்றிற்கு முறையான இடங்களில் சாமியானா பந்தல் அமைத்து இருக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், வேளாண்மை அலுவலர் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் தங்கள் துறையின் மூலம் அதிகளவில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை விழா நடைபெறும் அன்று வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், இந்திய விடுதலைக்காக போராடிய சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்துதல் உள்ளிட்ட பணிகளையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல் பணிகளையும் சிறப்பாக செய்ய தகுந்த முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட துறையினர் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மேலும் விழா சிறப்பாகவும், அமைதியாகவும் நடந்திட அனைத்து அலுவலர;களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!