College bus motor cycling collision near Perambalur: student wound
பெரம்பலூர் அருகே கல்லூரி பேருந்தும், மாணவரும் வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் மாணவர் படுகாயம் அடைந்து திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே உள்ள வல்லாபுரம் கிராமத்தை சேர்ந்வர் முருகேசன், இவரது மகன் சரவணன். தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டிரிபிள் “இ” படித்து வருகிறார். இன்று காலை தண்ணீர் பந்ததில் உள்ள கல்லூரிக்கு சென்று விட்டு மெயின்ரோட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு கல்லூரி பேருந்து, எதிர்பாராத விதமாக மோதியதில் சரவணன் ஓட்டி வந்த மோட்டர் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சரவணன், பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சி மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.