Coming April 1st from to Perambalur New bus stand inside, stop and Park the car, bike banned

வரும் ஏப். 1 முதல் பெரம்பலூர் பேருந்து நிலையத்திற்குள் கார், பைக் நுழையவும், நிறுத்தவும் தடை விதிப்பு

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில், நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ. 10 வசூலிக்கப்படுவதால், கட்டணம் செலுத்த விரும்பாதவர்கள் வாகனங்களை சுமார் 30 – 50 கி.மீ சென்று ஓரிரு மணிக்குள் திரும்பி வந்து விடுவதால், பேருந்து நிலையத்திற்குள்ளேயே விட்டு செல்கின்றனர். அதனால் பேருந்துகள் நிறுத்தவும், பயணிகளுக்கும் இடையூறு இருந்து வந்தது. இதனையொட்டி நகராட்சி அதிகாரிகள் சார்பில் பேருந்து நிலையத்திற்கு செல்ல கார் மற்றும் பைக்குகளுக்கு வரும் ஏப்.1 முதல் தடை விதிக்கப்படுகிறது. மேலும், தடை மீறுபவர்களுக்கு அபாராதம் உள்ளிட்ட காவல் துறை நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால். பொதுமக்களின் கோரிக்கையான முறையாக வாகன நிறுத்துமிடங்கள் ஒதுக்கப்படவில்லை, என்பதோடு வாகனம் நிறுத்தும் நிலையங்களிலும் கட்டணத்தை குறைக்காமல் நகராட்சி செயல்படுவதாகவும் பொதுமக்கள் , பயணிகள் குறைகளை தெரிவிக்கின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!