Community Baby Shower Festival: 360 pregnant women in Perambalur district
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக பெரம்பலூர் வட்டாரத்தில் முத்துகிருஷ்ணா திருமண மண்டபத்திலும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் வாலிகண்டபுரம் சமுதாய நலக்கூடத்திலும், ஆலத்தூர் வட்டாரத்தில் ஆலத்தூர் சமுதாயக்கூடத்திலும் தலா 120 கர்ப்பினித் தாய்மார்கள் வீதம் 360 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் மருதைராஜா, மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, வாழ்த்தினர்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் மற்றும் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.