Compensation was fractured in the accident, she gave no government bus confiscation

விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை பெரம்பலூர் நீதிமன்றம் ஜப்தி செய்தது.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளைம் அருகே உள்ள நரியன்குழி பகுதியை சேர்ந்த பழனிமுத்து மகள் ரஞ்சிதா கடந்த 2005 ஆம் ஆண்டு அரசு பேருந்து ஏறிக் கொண்டிருந்கும் போது ஓட்டுநர் கவனக்குறைவாக பேருந்தை இயக்கியதால் சிறுமியாக இருந்த ரஞ்சிதா பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் கால்முறிவு ஏற்பட்டது. இது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு அரியலூர் விரைவு நீதிமன்றனத்தில் கடந்த 2006 ம் ஆண்டு நவம்பர் 2 ம் தேதி இப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி திருச்சி அரசு போக்குவரத்து கழகம் பாதிக்கப்படட சிறுமி ரஞ்சிதாவிற்கு ரூ.1லட்சத்து 16 ஆயிரம் வழங்க தீர்ப்பு வழங்கி உத்திரவிட்டது. அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தியதால் ரஞ்சிதாவின் தந்தை பழனிமுத்து பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2016 ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்ட்ட ரஞ்சிதாவிற்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 1லட்சத்து 99 ஆயிரத்து 342 வழங்க உத்திரவிட்டு திருச்சி அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி நசீமா பானு உத்திரவிட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்ற பேருந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தது.அதனை கோர்ட் அமீனாக்கள் ஜப்தி செய்து நீதிமன்றனத்திற்கு எடுத்து சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!